அதிமுக அரசு மீது டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு

525 0

tks1_2794623f_2875945fஉள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக இருப்பதாகவும், அதை எதிர்கொள்ள பயந்து அதிமுக அரசு சட்டத் திருத்தங்களை கொண்டு வருவதாகவும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருந்தாலும்கூட, அதிகமாகப் பேசிவிடக்கூடாது, அரசு மீது குறை, குற்றச் சாட்டுகளை கூறிவிடக்கூடாது என்பதில் அதிமுகவினர் தெளிவாக உள்ளனர்.
திமுகவினரை பேச அனுமதிக்கும்போது, தங்களிடம் உள்ள பதில் சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் குறுக்கிட்டுப் பேச நினைக்கின்றனர்.
முக்கியப் பிரச்சினைகளை எழுப்புவதை தடுக்கின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் சட்டப்பேரவை வந்து செல்ல அரசால் இடம் ஒதுக்க இயலும்.
முதல்வரின் உடல்நலம் கருதி, அவருக்கு இரண்டு இட இருக்கை ஒதுக்கியிருக்கும் போது, முன்னாள் முதல்வரின் வசதிக்கேற்பவும் இடம்ஒதுக்க வேண்டும். மனமிருந்தால் மார்க்கம் இருக்கும். அவர்களுக்கு மனம் இல்லை எனக் கருதுகிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டப் பேரவை உறுப்பினர், பேரவை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உரிய வசதிகள் செய்து கொடுக்காதது சட்டப்பேரவைத் தலைவரின் தவறான அணுகுமுறை, அது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment