யாழில் கடந்த 18 மாதங்களில் மட்டும் விபத்துக்களில் 83 பேர் உயிரிழப்பு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

372 0

accident2-720x480யாழ்.மாவட்டத்தில் வீதி விபத்துக்களால் கடந்த 18 மாதங்களில் மட்டும் 4 ஆயிரத்து 100 பேர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 83 பேர் பரிதாபகரமாக உயிரிளந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிளந்தவர்களின் பெரும்பாலானவர்கள் 30 வயதிற்கும் குறைந்த இளம் சமூகத்தினைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு யாழ்.போதனா வைத்திய சாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.
வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கிலான கவனஈர்ப்பு நிகழ்வுகளை நடாத்தும் யாழ்.போதனா வைத்திய சாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று யாழ்.போதனா வைத்திய சாலையில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர்கள் கருத்து வெளியிடும் போதே மேற்படி புள்ளிவிபரங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- அண்மைக்காலமாக வீதி விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக வடமாகாணத்திலும் அதிலும் யாழ்.மாவட்டத்திலும் அதிகளவில் நடைபெறும் விபத்துச் சம்பவங்களினால் பெரும்பாலனவர்கள் உயிரிளந்துள்ளனர்.
கடந்த வருடத்தில் யாழ்.மாவட்டத்தில் நடைபெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி யாழ்.போதனா வைத்திய சாலையில் மட்டும் 3 ஆயிரத்து 204 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 64 பேர் பரிதாபகரமாக உயிரிளந்துள்ளனர்.
அதே போன்று இவ்வருடத்தின் முதல் கால் ஆண்டு காலப்பகுதியில் 509 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 8 பேர் உயிரிளந்துள்ளனர்.
மேலும் அடுத்த காலாண்டுப் பகுதியில் 387 பேர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 11 பேர் உயிரிளந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிளந்தவர்களின் பெரும்பாலனவர்கள் 30 வயதிற்கும் குறைந்த இளம் சமூகத்தினரே உள்ளடக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துக் சம்பவங்களில் அதிகமானவை கோரமான விபத்துச் சம்பவங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.