கடந்த கால தவ­று­களை எதிர்­கா­லத்தில் இழைக்க மாட்டோம் – கோத்­த­பாய

285 0

அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசி காலத்தைக் கடத்­து­கின்­ற­னரே தவிர அபி­வி­ருத்­தியை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்ற தெளிவு இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இல்லை. எம்மைப் பழி­வாங்­க ­வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்­டுமே நல்­லட்­சி­யா­ளர்­க­ளிடம் உள்­ளது என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தெரி­வித்துள்ளார்.

அத்துடன் மீண்டும் எமது ஆட்­சியில் ஜன­நா­ய­கத்தை மக்கள் உண­ரு­வார்கள். கடந்த காலங்­களில் விட்ட தவ­று­களை மீண்டு இழைக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

எலிய அமைப்பின் மாநாடு நேற்று கடு­வல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ இதனைக் குறிப்­பிட்டார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

யுத்­தத்தின் பின்னர் இந்த நாட்­டை சரி­யான பாதையில் கொண்­டு­செல்ல அவ­சி­ய­மான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களைச் செய்ய வேண்டும். அதற்­கான நேர்த்­தி­யான அபி­வி­ருத்­தியில் விமான நிலையம், துறை­முகம் என்­பன மிகவும் முக்­கி­ய­மா­னவை. அதனால் தான் நாம் விமான நிலையம், துறை­முகம் ஆகி­ய­வற்றை உரு­வாக்­கினோம். எனினும் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் அவற்றை நிறுத்தும் நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

பிரதமரே இந்த அபி­வி­ருத்­தி­களை தடுக்­கின்றார். விமான நிலையம், துறை­முகம் அமைத்­தது நாமாக இருந்­தாலும் அவை அனைத்­துமே இந்த நாட்­டிற்­கான வளங்­க­ளாகும். ஆனால் நாம் அவற்றைச் செய்த ஒரே கார­ணத்­தினால் எம்மைப் பழி­வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்­கத்தில் இந்த அபி­வி­ருத்­தி­களை பிர­தமர் தடுத்து வரு­கின்றார். இதனால் தான் எமது நாட்டில் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் உரு­வா­கி­யுள்­ளன. இந்த அர­சாங்கம் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசு­கின்ற போதிலும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்தத் தெரி­ய­வில்லை. இன்­று­ வரை பேசிக்­கொண்டே உள்­ளனர். ஆனால் நடை­மு­றைக்கு ஒன்றும் வர­வில்லை.

எமது ஆட்­சியில் சுய­மா­கவும், தைரி­ய­மா­கவும் தீர்­மானம் எடுக்­கக்­கூ­டிய தலை­மைத்­துவம் எமக்கு இருந்­தது. யுத்­தத்தை நாம் முன்­னெ­டுத்த வேளையில் அதற்குத் தேவை­யான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க பாது­காப்பு குழுக்­கூட்­டத்தில் ஜனா­தி­பதி தீர்­மானம் எடுத்தார். பாது­காப்பு படை­க­ளுக்­கான உணவுப் பற்­றாக்­குறை ஏற்­பட்ட வேளையில் அதனைத் தீர்க்க சர்­வ­தேச உத­வி­களைப் பெற்று நட­வ­டிக்கை எடுத்தார். நாட்­டுக்­காக சுய­மாக, சுயா­தீ­ன­மாக தீர்­மானம் எடுக்க முடிந்­தது. ஆனால் இந்த ஆட்­சியில் அவ்­வாறு ஒன்றும் இல்லை. கடந்த மூன்று ஆண்­டு­களில் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ளர்கள் மூவர் மாற்­றப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு பல­வீ­ன­மான முறையில் எவ்­வாறு ஆட்­சியைக் கொண்­டு­செல்ல முடியும் என்ற கேள்வி எழு­கின்­றது.

பாது­காப்பு அமைச்சில் இருந்த முக்­கி­ய­மான நபர்கள் அனை­வரும் மாற்­றப்­பட்­டுள்­ளனர். இதேபோல் ஏனைய அமை­ச்சு ­க­ளிலும் இடம்­பெற்­றுள்­ளது. மேலும் அரச அதி­கா­ரி­களை விசா­ரணை என்ற பெயரில் நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு கொண்டு சென்று விசா­ரித்து வரு­கின்­றனர். விசேட நீதி­மன்­றங்­களை உரு­வாக்­கி­யுள்­ளனர். ஆனால் மறு­புறம் நாட்டின் பொரு­ளா­தாரம் மோச­மான நிலையில் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அதனை மீட்­டெ­டுக்க எந்த நட­வ­டிக்­கையும் எடுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இந்த ஆட்­சியில் வேலைத்­திட்டம் என ஒன்றும் இல்லை. மாறாக அர­சியல் பழி­வாங்கல் மட்­டுமே இவர்­க­ளிடம் உள்­ளது. நான்கு ஆண்­டு­களைக் கடக்­கின்ற போதிலும் இவர்­களின் வேலைத்­திட்டம் நடை­மு­றைக்கு வரா­துள்­ளது.

எவ்­வாறு இருப்­பினும் அடுத்து நாம் உரு­வாக்­கப்­போகும் எமது ஆட்­சியில் அனைத்து வேலைத்­திட்­டங்­க­ளையும் நேர்த்­தி­யாக செய்­யக்­கூ­டிய வகையில் இப்­போதே நாம் எம்மை தயார்­ப­டுத்தி வரு­கின்றோம். அர­சாங்­கத்தைக் கைப்­பற்­றிய பின்னர் அடுத்த கட்­டத்தைப் பற்றி சிந்திக்காது இப்போதே அதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம். சகல துறைசார் நிபுணர்களையும் சந்தித்து இவற்றை ஆராய்ந்து வருகின்றோம். கடந்த காலங்களில் நாம் விட்ட தவறுகளை இனியொரு போதும் நாம் விடப் போவ தில்லை. மீண்டும் எமது ஆட்சி உருவாகும் போது மக்கள் ஜனநாயகத்தை உணரும் சூழலும் உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment