ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!

219 0

இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரயில் பயணக் கட்டணங்கள், 15 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன என, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், குறைந்தபட்சக் கட்டணமாக, 10 ரூபாயே தொடர்ந்தும் காணப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான ஆரம்ப அறிவிப்பு, கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதெனச் சுட்டிக்காட்டும் ரயில்வே திணைக்களத் தகவல்கள், இறுதியாக ரயில் கட்டண அதிகரிப்பு, 2008ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவிக்கின்றன.

இதன்படி, மூன்றாம் வகுப்புக்கான குறைந்தபட்சக் கட்டணமான 10 ரூபாய், இரண்டாம் வகுப்புக்கான 20 ரூபாய், முதலாம் வகுப்புக்கான 40 ரூபாய் ஆகியன, மாற்றமடையாது. ஆனால், குறைந்தபட்சக் கட்டணத்துடன் பயணம் செய்யக்கூடிய தூரம், 9 கிலோமீற்றரில் இருந்து, 7 கிலோமீற்றராகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டண மாற்றத்தின் காரணமாக, ரயில் பருவகாலச் சீட்டுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment