தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்யும் – வானிலை அதிகாரி தகவல்

20309 71

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு சில இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கை முதல் கர்நாடகம் வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. அதன் காரணமாக இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்யும். தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். இந்த நிலை 4 நாட்கள் நீடிக்கும்.

இவ்வாறு வானிலை அதிகாரி தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

நிலக்கோட்டை, வால்பாறை, தலா 8 செ.மீ., மேட்டுப்பட்டி 7 செ.மீ., பெரியகுளம், கொல்லிமலை தலா 5 செ.மீ., பரமத்திவேலூர் 4 செ.மீ., திருச்சி, பெரியாறு, நாங்குநேரி, முலனூர், மைலாடி, அரவக்குறிச்சி, கே.பரமத்தி, பேராவூரணி, செங்கோட்டை, திண்டிவனம் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 35 இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

Leave a comment