தமிழின அழிப்புக்கு சர்வதேச சுஜாதீன விசாரணையை வலியுறுத்தி மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்றைய தினம் சுவிஸ் நாட்டை சென்றடைந்தது. 8 வது நாளாக இன்று காலை பசெல் நகரில் இருந்து ஆரம்பமான ஈருருளிப்பயணம் இன்று மாலை சொலத்தூண் மாநிலத்தைச் சென்றடைந்தது. இப்பயணத்தில் சிறுவர்களும் தன்னார்வத்துடன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி வேண்டிய ஈருருளிப்பயணம் ஐநா மனிதவுரிமை பேரவையின் 33 வது அமர்வை முன்னிட்டு நகர்ந்தாலும், ஈழத்தமிழர்களின் தணியாத தாகத்தையும் தொடர்ச்சியான போராட்டத்தையும் வலியுறுத்தி நிற்கின்றது.எதிர்வரும் 26.09.2016 அன்று ஜெனிவாவில் நடைபெறும் மாபெரும் பேரணியில் மனிதநேய ஈருருளிப்பயணம் இணைந்துகொள்வதோடு பின்வரும் கோரிக்கைகளை உள்ளடங்கிய மனுவும் ஐநா மனிதவுரிமை ஆணையாளரின் காரியாலயத்தில் கையளிக்கப்படும்.