பொலிஸார் நேற்று அதிகாலை வரை நடாத்திய 5 மணி நேர விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 1714 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரின் விசேட ஆலோசனைப்படி நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களை கைது செய்வதற்காகவே இந்நத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் (28) இரவு 11.00 மணி முதல் நேற்று அதிகாலை 05.00 மணி வரை இந்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.