8 மாதத்தில் 1890 பேர் வீதி விபத்துக்களில் பலி!

277 0

இலங்கையில் கடந்த 8 மாதத்தில் 1890 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் 570 பேர் பாதசாரிகளாகவும் 638 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களாகவுமே உள்ளனர்.

 

அத்துடன், கடந்த 8 மாதத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த 123  பேர் , சாரதிகள் 151 பேர் , பயணிகள் 259 பேர்,  சைக்கிளில் பயணித்த 144 பேர்  என மொத்தமாக 1890  பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a comment