தமிழகத்தில் கூலிப்படைக் கலாச்சாரம் – திருமாவளவன்

5128 25

thiruma_2465766fகூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது.
தமிழக அரசு இதுகுறித்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் பட்டப் பகலில் படுகொலைகள் நடைபெறுகின்றன. காவல் துறையின் முன்னிலையிலும் நடைபெறுகின்றன.
அண்மையில் சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கூலிப்படை கலாச்சாரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது.
நீதிமன்றத்தில் சரண் அடைபவர்களை மட்டும் குற்றவாளிகளாக கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.
அவர்களுக்குப் பின்னால் உள்ள கூலிப்படையினரை விட்டுவிடுகின்றனர்.
கூலிப்படையை ஒழிக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.
இப்பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment