நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜோசப் ஸ்டாலினால் கொல்லப்பட்டார், அது நேருவுக்கு தெரியும் – சுப்ரமணிய சுவாமி

269 0

சுதந்தரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஸ்டாலினால் சிறையில் வைத்து கொல்லப்பட்டார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். 

இந்திய புரட்சி நாயகரும் இந்தியாவின் தன்னிகரற்ற சுதந்தரப் போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், 1945 ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி விமான விபத்தில் 48-ஆவது வயதில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனாலும், இவருடைய மரணம் குறித்துப் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.

இதற்கிடையே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை, சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஸ்டாலினால் சிறையில் வைத்து கொல்லப்பட்டார். இந்த விஷயம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குத் தெரியும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.

திரிபுரா தலைநகர் அகர்தலாவில் கலந்து கொண்டு பேசும்போது இந்தத் தகவல்களை சுவாமி நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-

1945-ம் ஆண்டு நேதாஜி விமான விபத்தில் உயிரிழந்தார் என பரப்பட்ட தகவல் நேரு மற்றும் ஜப்பானின் கூட்டு சதித்திட்டம் ஆகும். அப்போதயை சோவியத் யூனியனில் தங்குவதற்கு இடம் தேடிய நேதாஜிக்கு சர்வாதிகாரி ஸ்டாலின் தஞ்சமடைய அனுமதியளித்தார்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஸ்டாலின் உத்தரவால் கொல்லப்பட்டார். இதைப் பற்றிய அனைத்து விவரங்களும் முன்னாள் பிரதமர் நேருவுக்கு தெரியும். 75 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதால் தான் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்க முக்கிய காரணம்.

காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியர்கள் ஆயுதம் ஏந்தினால் அதை பிரிட்டன் அரசால் சமாளிக்க முடியாது, ஏனெனில் இந்தியர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் போது பிரிட்டிஷ்காரர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

அதனாலேயே நமக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்த தகவலை பிரிட்டன் முன்னாள் பிரதமர் க்ளீமண்ட் அட்லீஸ் 1948-ம் ஆண்டு இந்தியா வந்த போது அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a comment