புதிய வாக்காளர் இடாப்புக்கான இறுதி ஒப்பம் எதிர்வரும் 25 ஆம் திகதி இடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் சம்பந்தமாக மீள் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
அந்த நடவடிக்கை நிறைவடைவதற்கு ஒரு மாத காலம் தேவைப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.