நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இலங்கையின் முயற்சிகளிற்கு ஐக்கியநாடுகள் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் ஐக்கியநாடுள் செயலாளர் நாயகம் அன்டொனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி ஊடக சுதந்திரம் நல்லிணக்கம் ஆகியவற்றை பலப்படுத்துவதில் இலங்கை கண்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதி சிறிசேன செயலாளர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய முன்னேற்றங்களை நேரில் காண்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஐநா செயலாளர் நாயகத்திற்கு சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள செயலாளர் நாயகம் கூடியவிரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.
சமாதானத்தை மனித உரிமையை கட்டியெழுப்புதல் போன்றவற்றில் இலங்கை காண்பித்து வரும் அக்கறையை ஐநா செயலாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.