மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னால் பொய்யான தகவல்களை வழங்கியதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்வதா? அல்லது விலக்கிக் கொள்வதா? என்பது குறித்த தீர்ப்பை எதிர்வரும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் ரங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று இந்த வழங்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.