லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவரின் வேதனத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
இன்றை நாடாளுமன்ற அமர்வின் போது இது தொடர்பான பிரேரனை விவாத்தினையடுத்து ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே ஏனைய ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களின் வேதனத்தை அதிகரிப்பு தொடர்பான விவாதமும் நாடாளுமன்றில் இடம்பெற்றது.
விவாத்தை தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் இந்த தீர்மானமும் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, வெளிவாரி பட்டப்படிப்பு என்பது கானல்நீரை போன்றது என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் எழும்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.