தமிழகத்துக்கு இன்று தண்ணீர் வழங்குமாறு உயர் நீதிமன்றம் விடுத்த உத்தரவையடுத்து கர்நாடகா மண்டியாவில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடைப்பெற்றது.
இதனையடுத்து பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்துக்கு இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் காவிரி நதியில் இருந்து, கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மண்டியா மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
போக்குவரத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் காவற்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.