கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த சிலர் மீண்டும் புதிய திரைப்படம் ஒன்றை நடித்துவருவதாக அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தின் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த காலத்தில் நன்றாக சம்பாதித்த அமைச்சர்கள் சிலர் தற்போது உண்டியளை ஏந்த தொடங்கியுள்ளனர்.
அந்த புதிய திரைப்படத்திற்கு கதை, திரைகதை வசனம் எழுதி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ இயக்குகிறார்.
இதில் நகைச்சுவை நடிகராக விமல் வீரவன்ச போன்றவர்கள் நடிக்கின்றனர்.
நடன இயக்குனராக பந்துள குணவர்தன பணியாற்றுகின்றார்.
இராணுவத்தை, வேட்டையாடும் அரசாங்கத்தின் முயற்சி என்ற கருபொருளிலேயே இந்த படம் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.