ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜக்கிய நாடுகளின் 71 வது பொது சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.
அவர் இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 2 அரை மணியலவில் உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதன்போது சட்ட போதைப்பொருள் ஒழிப்புக்கு சர்வதேச ரீதியில் நடவடிக்கை மெற்கொள்ள பட வேண்டிய முறை உள்ளிட்ட விசேட வேலை திட்டங்கள் தொடர்பிலான யோசனையை ஜனாதிபதி ஜக்கிய நாடுகள் பொது சபை கூட்டத்தில் முன்வைக்கவுள்ளார்.
இதனிடையே, ஐக்கிய நாடுகளின் 71வது பொது சபை அமர்வில் கலந்துகொண்டுள்ள அரச தலைவர்களுக்கு, ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பேன் கீ மூன் நேற்று விசேட மதிய விருந்தை வழங்கிருந்தார்.
இதன்போது ஜனாதிபதியுடன் உரையாடிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம் உலகத்திற்கே எடுத்து காட்டாக விளங்குவதாக தெரிவித்தார்.
இலங்கையின் எதிர்கால செயற்பாடுகளுக்காக தம்மாலான அனைத்து ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.