இலங்கையில் வெப்பநிலை அதிகரிப்பு

360 0

hot-weatherஇலங்கையின் 8 மாவட்டங்களில் இன்று மதியம் வழமையை விட அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று ஹாம்பாந்தோட்டை மாவட்டத்தின் வெப்பநிலை 5 பாகை செல்சியத்தால் அதிகரித்துள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணம், பதுளை, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களில் வெப்பநிலையானது 3 பாகை செல்சியசினால் அதிகரித்து காணப்பட்டதாக காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு, அநுராதப்புரம் மற்றும் குருநாகல் மாவமட்டங்களில் வெப்பநிலையானது 2 பாகை செல்சியசினபல் அதிகரித்து காணப்பட்டது.

நாடுமுழுவதும் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் இன்று இரவு வேளை வெப்பநிலை வழமையை விட அதிகரித்து காணப்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வவுனியா மாவட்டதிலேயே அதிமான வெப்பநிலையாக 37 பாகை செல்சியஸ் வெப்பநிலை பாதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதிகுறைந்த வெப்பநிலையான 13.4 செல்சியஸ் வெப்பநிலை நுவரெலியா மாவட்டத்தில் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.