பந்தகிரி சம்பவம் – 4 பேருக்கு விளக்கமறியல்

343 0

th3ஹம்பாந்தோட்டை பந்தகிரிய பிரதேசத்தில் காவல்நிலையத்தில் இருந்து தப்பிச்சென்றதாக கூறப்பட்ட இளைஞரும், அவருக்கு மறைந்திருக்க அமைக்கலம் கொடுத்த அவரது சகோதர்கள் இருவரும் சகோதரியும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய அவர்கள் இந்த மாதம் 30ஆம் திகதி வரைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் மங்ஜூல கருணாரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த இளைஞர் காணாமல் போனமை தொடர்பில் சீர்செய்யப்பட்ட காணொளி மற்றும் சீர்செய்யப்படாத காணொளி என்பவற்றை காவல்துறையினருக்கு ஒப்படைக்குமாறு இலத்திரனியல் ஊடகங்களுக்கு, ஹம்பாந்தோட்டை பிரதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பந்தகிரி பிரதேசத்தில் நெல் திருட்டு தொடர்பில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் காவல்நிலையத்தில் இருந்து தப்பிச்சென்றிருந்தார்.

பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.

இவர் காணாமல் போன காலப்பகுதியில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே அவரது உறவினர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.