மனித உரிமைகள் தொடர்பில் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்திருந்த அறிவித்தல் சரியானது -அஸ்கிரிய பீடம்

242 0

மனித உரிமைகள் தொடர்பில் காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை  தெரிவித்திருந்த அறிவித்தல் சரியானது எனவும், அதனை ஏற்றுக் கொள்வதாகவும் அஸ்கிரிய பிரிவின் சங்க சபை அறிவித்துள்ளது.

அப்பிரிவின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் இது தொடர்பில் இவ்வாறு கூறியுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பில் சமய ரீதியில் மட்டுமன்றி, உலக வரலாற்றிலும் முதலில் கருத்துத் தெரிவித்திருப்பவர் புத்தர் பெருமானே ஆவார். அதேபோன்று, காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மனித உரிமைகள் தொடர்பில் கத்தோலிக்க மக்கள் சார்பாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் மிகவும் தெளிவான முறையில் சர்வதேச ரீதியில் எமக்குள்ள சவால்கள் மற்றும் மனித உரிமைகளை முன்னிருத்தி நாட்டிற்கு விடுக்கும் அழுத்தங்கள் என்பவற்றுக்கு பதிலளித்திருந்தார்.

மனித உரிமை என்பது சமயத்துக்குள் உள்ள ஒன்றாகும். இதனால், சமயம் இன்றி உரிமைகள் என தனியாக பிரித்து கருத்துத் தெரிவிக்க முடியாது எனவும் அஸ்கிரிய பதிவாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment