பிரேமதாஸ, லலித் அத்துலத் முதலியின் கொலையில் பொலிஸாருக்கு பங்கு – கூட்டு எதிர்க்கட்சி

251 0

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் கொலையில் பொலிஸாருக்கு பங்குள்ளது. எனவே அதுபோன்ற சூழ்நிலை நாட்டில் மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(26) பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது.

அவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாளக த சில்வாவின் சூழச்சியானது குறித்த ஒரு காலப்பகுதிக்கு முன்னிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு வேலைத்திட்டமாகும். முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க செயற்திறன்மிக்க ஒரு அதிகாரியாவார். அவரை ஒரு வருட காலம் சிறையில் அடைத்தனர். எனினும் அவருக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் லலித் அதுலத் முதலியை  பொலிஸாரின் பங்குபற்றலுடன் அப்போதிருந்த அரசியல்வாதிகள் சிலரே அவரைக் கொலைசெய்ததாக நாம் நம்புகிறோம்.

இதனை அறிந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மேதின கூட்டத்தில் வெளியிட இருந்தார். அவ்வாறு வெளியிட்டிருந்தால் அன்று பொலிஸாரில் அரைவாசிப்பேர் சிறை செல்ல வேண்டியிருந்திருக்கும்.  எனினும் அதனை வெளியிடுவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவையும் கொலை செய்தனர். இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் பொலிஸார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றார்.

Leave a comment