பெயர் பட்டியலில் தமது பெயர் உள்வாங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சகோதரிகள் இருவர் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள சுற்று வட்டத்தில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரில் ஒருவருக்கு மாத்திரமே வீடு கிடைக்கப்போவதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இரண்டாவது நாளகவும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மீரியபெத்த தோட்டத்தில் இரு குடும்பங்களாக இரு வீடுகளில் வாழ்ந்து வந்த இவர்கள் மண்சரிவில் சிக்குண்டு தமது உறவுகளையும் பறிகொடுத்து, தமது உடமைகளையும் இழந்த நிலையிலேயே குறித்த முகாமில் தங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.