கிளிநொச்சி பொதுச்சந்தையில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கை, இன்று கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட தடயவியல் பொலிசாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த பகுதிக்குச் சென்ற பகுப்பாய்வு குழுவினர், தீ விபத்து இடம்பெற்றமைக்கான காரணம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 125 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன்போது 100 கடைகள் முற்றாக எரிந்ததோடு, ஏனையவை பகுதியளவில் பாதிக்கப்பட்டிருந்தன.
தீ விபத்து ஏற்பட்டமை தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், விபத்திற்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் தற்போது பகுப்பாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் தீவிபத்து கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்று உள்ளமையால் குறித்த தினத்தில் கடைகளில் விளக்கு வைத்து வழிபடுவது வழக்கம் அதனால் குறித்த தீவிபத்து ஏற்ப்பட்டிருக்குமா அல்லாது மின் ஒழுக்கினால் நடைபெற்று இருக்குமா அல்லது யாரும் தீவைத்திருபார்களா என்ற பல கோணங்களில் பகுப்பாய்வினையும் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.