இலங்கையின் நல்லிணக்க முயற்சிகள் சிறந்த வகையில் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை மாநாட்டில் தமது இறுதி உரையை நேற்று நிகழ்த்திய போது அவர் இதனை குறிப்பிட்டார்.
யுத்ததின் பின்னர், நல்லிணக்க செயற்பாடுகள் சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையிலும் மியன்மாரிலும் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் இணைந்தவகையில் அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், அனைத்து நாடுகளும் தமது மக்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என்றும் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.