பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பொய்சாட்சியம் வழங்கியதற்கு எதிராக, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான விசாரணை சம்பந்தமாக எழுத்து மூல விமர்சனத்தை முன்வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு அதிகாரிகளுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான மனு இன்று (26) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போது எழுத்து மூல விமர்சனத்தை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதால் கால அவகாசம் வழங்குமாறு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோரிக்கையை கருத்திற் கொண்ட பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க, எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் அது தொடர்பான எழுத்து மூல விமர்சனத்தை முன்வைக்குமாறு அவகாசம் வழங்கியுள்ளார்.