தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

292 0

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, உடுவே தம்மாலோக தேரரின் சட்டத்தரணி சுகயீனமடைந்துள்ளதாக அவரின் கனிஷ்ட சட்டத்தரணி மன்றுக்கு தெரிவித்தார்.

அதன்படி வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 15ம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி சம்பத் விஜேரத்ன உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment