தற்போதைய அரசாங்கம் பயத்தின் காரணமாக தேர்தலை ஒத்திவைப்பதாக வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நேற்று (25) அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தலை நடத்துவதற்கு சந்தர்ப்பம் இருந்த போதிலும் மக்களை காரணம் காட்டி தேர்தலை பிற்போடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை எனவும் இது தொடர்பில் சிக்கல் நிலவுவதாகவும் தற்போதைய அரசாங்கம் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.