இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கையின் மன்னார் வளைகுடா இடையே, ஹிந்துக் கடவுள் ராமர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும், ராம சேதுவை, தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்’ என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
‘இந்த வழக்கில், 10 ஆண்டுகளாகியும், தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை. உடனடியாக, அதை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் அவர் வலியுறுத்தினார். ‘அடுத்த, 10 நாட்கள் காத்திருக்கவும்’ என, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.