நெல்சன் மண்டேலாவின் பாதையில் பயணிப்பதற்கு உலகின் அனைத்து தலைவர்களுக்கும் தான் அழைப்பு விடுப்பதாக நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக நேற்று (24) பிற்பகல் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
நெல்சன் மண்டேலாவின் 100வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த சமாதான உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனிதாபிமானம் பற்றி உலகிற்கு முக்கியமான பல பாடங்களை கற்றுக்கொடுத்த நெல்சன் மண்டேலா என்ற உன்னதமான ஆளுமையை பற்றி இன்று உலகத் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.