கடற்படை சிப்பாய்களுக்கு விளக்கமறியல்

324 0

court-rules-e1444231072605அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளரான உதுல் பிரேமரத்ன மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 கடற்படை சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்று பிற்பகல் புதுக்கடை மூன்றாம் இலக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வெள்ளவத்தை பிரதேசத்தில் உதுல் பிரேமரத்ன மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்கள் வெள்ளவத்தை காவற்துறையில் நேற்று முன்தினம் சரணடைந்தபின்னர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில், கடற்படையில் தற்போதும் சேவையாற்றிய 5 சிப்பாய்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.