தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்! -காக்கா

11733 0

தியாகி திலீபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நாளுக்கான ஏற்பாடுகள்குறித்து முன்னாள் போராளிகள், துயிலுமில்ல நடவடிக்கையில் ஈடுபடுவோர், பல்கலைக்கழக சமூகத்தினர் ,ஊடகவியலாளர்கள் அடங்கலாக உள்ள தமிழ் உணர்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன என திலீபன் நினைவு நாள் நிகழ்வுகள் தொடர்பில் முன்னாள் மூத்த போராளி மனோகர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது. மாவீர்ர் குடும்பத்தைச் சேர்ந்த மாறனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளின் முதன்மைச் சுடரை தீவகத்தைச் சேர்ந்த இரு மாவீர்ர்களின் தந்தை ஏற்றுவார். தொடர்ந்து அங்கு சமுகமளித்துள்ள ஏனைய மாவீர்ர்களின் பெற்றோர்கள் ஈகச்சுடர் ஏற்றுவார்கள். தொடர்ந்து தியாகி திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்படும்.

தொடர்ந்து தியாகி திலீபனையும் தமிழரின் விடுதலை போராட்ட வரலாற்றில் ஆகுதியாகிய மாவீர்ர்களையும் பொதுமக்களையும் நினைவு கூரும் வகையில் அகவணக்கம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெறும்.அந்த இடத்தின் புனித்த்தைப பேணும் வகையில் எவரது உரையும் அங்கு இடம்பொறாது.

தொடர்ந்து தியாகி திலீபனையும் தமிழரின் விடுதலை போராட்ட வரலாற்றில் ஆகுதியாகிய மாவீர்ர்களையும் பொதுமக்களையும் நினைவு கூரும் வகையில் அகவணக்கம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெறும்.அந்த இடத்தின் புனித்த்தைப பேணும் வகையில் எவரது உரையும் அங்கு இடம்பொறாது.

அதுபோலவே இவ்வருட திலீபன் நினைவுநாள் தொடர்பாக விடுத்த வேண்டுகோளுக்கும் அவர் மதிப்பளித்திருந்தார். இந்த முன்மாதிரியை அனைவரும் பின்பற்றுவார்கள் என்று நம்புகிறோம். மேலும் எமது வேண்டுகோளுக்கு மதிப்பளித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஐனநாயகப் போராளிகள் கட்சியினர். உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகள் அனைவருக்கும் எமது நன்றிகள் இவ்வாறு முன்னாள் மூத்த போராளி மனோகர் இவ்வருட திலீபன் நாள் ஏற்பாடுகள் தொடர்பாக விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment