ஐ.நா பிரதிநிதி மீண்டும் இலங்கை வருகிறார்

371 0

917376736untitled-1ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளரான றீட்டா ஐசக் அன்டியாயே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் தகவல்களை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 10ஆம் திகதி இலங்கை செல்லும் அவர், 20ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருப்பார்.

இந்த காலப்பகுதியில் அவர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களையும், சிவில் சமுக அமைப்புகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.