கலஹா, குருகல் ஓயாவில் மூழ்கி சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குருகல் ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெல்தொட்ட, பல்லேகம பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான். கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஒன்றிணைந்து குறித்த சிறுவனை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.