காணாமல் போனோருக்கு என்ன நடந்தது? – அனந்தி சசிதரன்

409 0

ananthy-sasitharan-720x480இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலங்களில் சுமார் 150 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இலங்கையிலுள்ள சிறைகளில் 125 பேர் மாத்திரமே தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறி வருகையில், ஏனையோருக்கு என்ன நடந்ததென கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33ஆவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அனந்தி இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்த 125 பேரைக்கூட அரசாங்கம் விடுதலை செய்யாமல், வழக்குப் பதிவும் செய்யாமல் தடுத்து வைத்திருப்பதானது, அவர்களையேனும் விடுதலை செய்ய தயாராக இல்லையென்பதையே வெளிப்படுத்துவதாக அனந்தி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இறுதி யுத்தத்தின்போது மனித குலத்திற்கு எதிராக, குறிப்பாக தமிழின அழிப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருக்கு தற்போதை அரசாங்கத்திலும் உயர் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அனந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாகவே நீதி கிடைக்க வேண்டுமாயின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் சுயாதீனமாக விசாரணை ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.