மட்டு – புதுக்குடியிருப்பு அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை

336 0

pudu1மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அப்பகுதி மக்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அத்துடன், படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கு முன்பாக நினைவு சுடரேற்றும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இரவு சீருடை அணிந்தவர்கள் புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் புகுந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தமிழ் மக்களை எழுப்பி, தாங்கள் இராணுவத்தினர் என்றும் ஊரை சுற்றி வளைத்துள்ளதாகவும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறி பெண்கள் ஆண்கள் முதியவர்கள் உட்பட 45 பேரை கடற்கரை ஓரத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் வெட்டி படுகொலை செய்துகொண்டிருக்கும்வேளை, இளைஞர் ஒருவர் அவர்களின் பிடியில் இருந்து தப்பியோட அவசர அவசரமாக துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு ஊர்காவற்படையினர் தப்பியோடிவிட்டனர். இதன்போது இவர்களினால் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.