மனு பயனளிக்க வில்லையாயின், ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கோரப்படும்-மாகல்கந்தே சுதந்த தேரர்

309 0

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மனு பயனளிக்க வில்லையாயின், ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரத்தின்படி பொது மன்னிப்பு வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அடுத்துவரும் நாட்களில் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் சகல மக்களும் கருதுவது போல ஞானசார தேரர் சிறையில் இருக்கத் தேவையில்லை எனவும் இதனால், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அவருக்கு கட்டாயம் கிடைக்கப் பெற்று தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் சுதந்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உண்மையான பௌத்த தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ஞானசார தேரரின் மகிமையை அறிந்தவர் எனவும், ஞானசார தேரரினால் இந்நாட்டுக்கு ஆற்றப்பட வேண்டிய பல சேவைகள் இன்னும் இருப்பதாகவும் சுதந்த தேரர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment