பாகிஸ்தானில் நடைபெறும் ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க ஆப்கான் அழைப்பு

307 0

201609202327582039_india-afghanistan-bangladesh-may-boycott-saarc-to-protest_secvpfபாகிஸ்தானில் நடைபெறும் ‘சார்க்’ மாநாட்டை புறக்கணிக்க ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்து உள்ளது. இந்தியாவிற்கு ஒத்துழைப்பு அளிப்பதாக வங்காளதேசம் அறிவித்து உள்ளது.

உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, சர்வதேச அளவில், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சிகளை இந்தியா தொடங்கி உள்ளது.
இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், இஸ்லாமாபாத் நகரில் நவம்பர் மாதம் நடக்கும் ’சார்க்’ மாநாட்டை புறக்கணிக்குமாறு தெற்கு ஆசிய நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ஷைதா முகமது அப்தாலி கூறுகையில், ’பாகிஸ்தானுக்கு கடுமையான செய்தி விடுக்கும் நேரம் வந்து விட்டது. அது, சார்க் மாநாட்டை புறக்கணிக்கும் அழைப்பாக கருதப்பட்டாலும் தவறு இல்லை. இதற்கு நிறைய நாடுகளின் ஆதரவை திரட்ட வேண்டும். பெரும்பாலான தெற்கு ஆசிய நாடுகள் இதே நிலைப்பாட்டில் இருக்கும் என்று கருதுகிறேன்’ என்றார்.
இதுபோல், ’சார்க்’ மாநாட்டை வங்காளதேசம் புறக்கணிப்பது தொடர்பாக, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, அடுத்த மாதம் 16-ந் தேதி இந்தியாவுக்கு வரும்போது முடிவு செய்யப்படும் என்று அந்நாட்டு தூதர் சையது முவாஜிம் தெரிவித்தார். ”பல்வேறு வாய்ப்புகள் உள்ளது, பிரதமர் மோடி ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எவ்விதமான விளைவுகள் வரும் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் கவபல்வேறு கோணங்களில் பரிசீலித்து வருகிறார். இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க நாங்கள் காத்திருக்கிறோம், ஆனால் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்று இந்தியாவிற்கான வங்காளதேச தூதர் கூறிஉள்ளார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பிரதமர் மோடியை நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தார்.