பொலிஸ் மா அதிபருக்கு பதவி விலகுமாறு கூறவில்லை- நளின்

254 0

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ பிரதமரோ அறிவுறுத்தவில்லை என சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபரை இரண்டு வாரத்திற்குள் பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment