இலங்கை பொருளாதார ரீதியில் சரியான திசையில் பயணிப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளதை நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக எடுத்துக் காட்ட கூட்டு எதிர்கட்சியினர் முயன்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
வியட்னாம், இந்தோனேசிய ஆகிய நாடுகளின் நாணயத்தின் பெறுமதி குறைவடைந்திருந்தாலும், இந்த நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது.
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளது. உலகளாவிய பொருளாதாரத்தை நோக்கும் போது நாட்டின் வெளிநாட்டு முதலீடு அதிகரித்து வருகிறது.
கடந்த வருடத்தில் வெளிநாட்டு நாணயத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதன் முறையாக நாட்டின் பிரதான கணக்கில் இருப்பு 01 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளது.
உலகளாவிய பொருளாதார துரையின் நம்பிக்கையை வெற்றிகொள்ள முடிந்துள்ளது. ஏற்றுமதி மேம்பாட்டுக்கு பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றும் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.