அமெரிக்காவில் நீதிபதியின் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்

353 0

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் அலுவலக வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான பென்சில்வேனியாவில் உள்ள மாசன்டவுன் பகுதில் டேவிட் சிம்சக் எனும் மாவட்ட நீதிபதியின் அலுவலகம் அமைந்துள்ளது.

எப்போதும் போல அலுவலக வளாகத்தில் அலுவல் வேலையாக நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்தனர். அப்போது நீதிபதியின் அலுவலகத்தின் வெளியே திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட தொடங்கினார்.

இதனால் பதட்டமடைந்த மக்கள் அலுவலகத்துக்கு உள்ளே அலறியடித்து ஓட தொடங்கினர். பின்னர் மர்ம நபரும் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததார்.

இதற்கிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Herald-Standard@hsuniontown

Police cars line the street headed to a Masontown magistrate’s office, where several people, including at least 1 police officer, were shot today around 2 p.m. https://www.heraldstandard.com/news/hsnewsnow/police-responding-to-call-of-multiple-people-shot-at-fayette/article_41c14229-c295-521b-a89e-4e0d3df6fe6a.html 

இந்த திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தால், போலீஸ் அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

Leave a comment