தோட்டப்பகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட எமது மக்கள் இன்று தடைகளை உடைத்தெறிந்து தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளனர்.
அதற்கான பாதையினை நாம் தமிழர் முற்போக்கு கூட்டணியாக முன்னெடுத்து வருகின்றோம். இதுவே எமக்குக் கிடைத்த வெற்றியாகும் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
தோட்டப்பகுதிகளில் புறக்கணிக்கப்பட்ட எமது மக்கள் இன்று தடைகளை உடைத்தெறிந்து தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ளனர்.
அதற்கான பாதையினை நாம் தமிழர் முற்போக்கு கூட்டணியாக முன்னெடுத்து வருகின்றோம்.
இதுவே எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.எமது செயற்பாடு இத்துடன் முடிந்து விடவில்லை.
எமது மக்களுக்கான தனி வீடுகளை அமைக்கின்றோம், காணி வழங்குகின்றோம்,. புதிய கிராமங்களை உருவாக்குகின்றோம். இதன் மூலமாக மக்கள் மத்தியில் தேசிய உணர்வு உருவாகியுள்ளது.
வடக்கு கிழக்கை போன்று மலையகமும் ஒரு கிராமமாக மாற்றம் காணுகின்றது. அதேபோல் தேசிய அதிகாரச பைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது எமது போராட்டத்தின் மூலமாக பெறப்பட்டதாகும்.