இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்று (19) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 167.41 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு டொலரின் விலை தொடர்ந்தேர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவதனால், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் உட்பட சலக பொருட்களினதும் விலை அதிகரிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெளிநாட்டுக் கடன் தொகையும் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று முன்தினம் 18 ஆம் திகதி 166.64 ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.