வூப்பெற்றால்
19.9.2018
தமிழீழத் தேசிய நாளான கார்த்திகை 27ல் வருடம்தோறும் யேர்மனியில் வெளிவரும் கார்த்திகைத்தீபம் சிறப்பு இதழுக்கான ஆக்கங்கள் உலகெங்கும் வாழும் எம்தமிழ் உறவுகளிடமிருந்து கோரப்படுகின்றது.
ஆக்கங்களை அனுப்பி வைக்கும் உறவுகள், தங்கள் சொந்த ஆக்கம் என்பதனை உறுதி செய்து, ஆக்கங்களை தட்டெழுத்து பிரதியாகவோ அல்லது தெளிவான கையெழுத்துப் பிரதியாகவோ எதிர்வரும் 05.11.2018ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும்.
ஆக்கங்கள் யாவும் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ கீழ்குறிப்பிடப்படும் முகவரிகளில் பொருத்தமானவற்றுக்கு அனுப்பி வைக்கலாம்.
தரமான மற்றும் பொருத்தமுடைய ஆக்கங்கள் கார்த்திகைத்தீபம் 2018 சிறப்பு இதழில் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்கள் தொடர்பான பரிசீலனைகள், மற்றும் பிரசுரத்துக்கான இறுதிநிலைத் தெரிவுகள் யாவும் ஆசிரியர் குழுவின் நிருவாக ஒழுங்கமைப்புக்கு உட்பட்டதாகும்.
கட்டுரைகள்:
* சமகால தாயக, உலக அரசியல் பற்றியனவாகவும்.
* சமூகநல விழுமியங்களை தாங்குபவனவாகவும்.
* எமது விடுதலை நோக்கிய பாதையின் புதிய எண்ணக்கருக்களை
கொண்டதாகவும்.
* தமிழீழ மக்களின் சமகால அறவழிப் போராட்டங்கள் பற்றிய
பார்வை கொண்டதாகவும்.
* எமது விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களின்
நினைவுக் குறிப்புகளை தாங்கியவனவாகவும்.
* புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் தொடர் விடுதலைச்
செயற்பாடுகளுக்கு வலிமை சேர்ப்பனவாகவும்.
* போரினால் நலிவுற்ற தாயக உறவுகளின் மீள்வாழ்வுப்
பணிக்கான பங்களிப்புகள் தொடர்பாகவும்.
* தேசியச் செயற்பாட்டில் இளையோரின் செயல் முனைப்புகள்
பற்றியதாகவும் அமைதல் வேண்டும்.
கவிதைகள்:
* மாவீரர்களின் வீரம்செறிந்த நினைவுகள் பற்றியனவாகவும்.
* சமூக மேம்பாடு பற்றியனவாகவும்.
* தாயக மக்களின் சமகால உணர்வலைகளை பிரதிபலிப்பனவாகவும்.
* தமிழீழ வளங்களின் மேன்மை பற்றியதாகவும்.
* தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்த நாளை அலங்கரிப்பனவாகவும்.
* பெருங்கவிதைகளாகவும், சிறுகவிதைகளாகவும் அமையலாம்.
ஓவியங்கள்:
* மாவீரர்களின் நினைவுகளை சித்தரிக்கும் வகையிலும்.
* தமிழர் வீர அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலும்.
* தமிழீழ வளங்களை வெளிப்படுத்தும் வகையிலும்.
* போர்க்கள வெளிப்பாடுகளை சுட்டி நிற்பனவாகவும்.
* விடுதலைப் பாதையில் மறக்க முடியாத சம்பவத்தை
சித்தரிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
உணர்வும் பகிர்வும்:
வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் தங்கள் இறுதிக் கணங்களில் வெளிப்படுத்தியவை, விடுதலைப் பாதையில் அயராது உழைத்த ஆதரவாளர்கள்,இன்னும் சமூகம் அறியவேண்டிய தாய்மண்ணில் நிகழ்ந்த விடயங்கள் பற்றிய உணர்வலைகளை பொருத்தமான தலைப்பின்கீழ் உள்ளடக்கி அனுப்பி வைக்கலாம்.
தொடர்புகளுக்கு : 0049(0)15127959234.
* தபால் முகவரி: Maaveerar Panimanai,
Tiergartenstr 273
42117 Wuppertal.
* மின்னஞசல் முகவரி: kaarthikaitheepam@gmail.com
-நன்றி-
ஆசிரியர்குழு,
கார்த்திகைத்தீபம்-2018.,
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,
யேர்மனி.