சட்டத்துக்கு மாறான முறையில் தனது வருமானத்தை மீறி சொத்துக்களை உழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
நோர்வேயில் இடம்பெற உள்ள கருத்தரங்கு ஒன்றில் கல்நது கொள்ள இருப்பதால் வௌிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு ரோஹித அபேகுணவர்தன தனது சட்டத்தரணியூடாக நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தார்.
அதேநேரம் தனிப்பட்ட விஜயமாக இத்தாலி செல்ல வேண்டி இருப்பதாலும் இம்மாதம் 30ம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 16ம் திகதி வரை வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.
அதன்படி அவருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள அவரது கடவுச்சீட்டை 10 இலட்சம் ரூபா தனிப்பட்ட பிணையில் விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.