ஹபராதுவ, உணவடுன பகுதியில் ஹசீஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரிடம் இருந்து 10 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொரளை பகுதியில் 3600 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்ய்பட்டுள்ளார்.
பொரளை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.