பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிற்கு கட்டாய விடுமுறை வழங்குமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் மீது கிழக்கு மாகாணத்தில் வைத்து தாக்குதல் செய்யும் திட்டத்தில் இருந்ததாக, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை தற்காலிகமாக தகவல் தொழிநுட்ப பிரிவிற்கு இடமாற்றம் செய்ய பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவருக்கெதிரான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவருக்கு கட்டாய விடுமுறை வழங்குமாறும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை வழங்கியுள்ளார்.