மாத்தளை மாவட்டத்திற்குறிய நான்கு பொலிஸ் நிலையங்கள் 12 மணி நேரம் நடத்திய விஷேட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப் படி தம்புள்ளை, கலேவல, சீகிரிய, நாஉல பொலிஸ் நிலையங்கள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை நடத்தியுள்ளன.
கஞ்சா மற்றும் ஹெரோய்ன் வைத்திருத்தல், சட்டவிரோத மணல் கடத்தல், நீதிமன்றத்தை புறக்கணித்தல், மது போதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டுக்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புள்ளை மற்றும் நாஉல நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.
இந்த இணைந்தந சோதனை நடவடிக்கையை தொடர்ந்தும் அந்தப் பிரதேசங்களில் முன்னெடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.