தன்னால் விரைவில் வெளியிடப்படவுள்ள போர் பற்றிய நூலானது போர்பற்றிய தெளிவான படமொன்றை வழங்கும் என அமைச்சரும் பீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,
போர் தொடர்பாக, அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நூலொன்றை வெளியிட்டிருந்தார். அதேபோல் இன்னும் பலர் பல நூல்களை வெளியிடலாம்.
ஒரு இராணுவத் தளபதி என்ற வகையில், எனது பங்களிப்பை உள்ளடக்கியதாக இந்த நூல் வெளிவருவதுடன், போருடன் தொடர்புடைய, சம்பவங்கள் தொடர்பாக இன்னும் தெளிவான படத்தை இந்நூல் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில், மேஜர் ஜெனரல் கமாமல் குணரட்ணவினால் எழுதி வெளியிடப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலில் பல இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் பொன்சேகா குற்றம்சாட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.