காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு பயனளிக்குமா இந்தச் சட்டம்?

26145 0

இன்று தகவல்கள் தான் உலகை ஆழ்கின்றன. இந்த தகவல்களை அறிவதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் உரிமை உள்ளது. சாதாரண மக்களும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்கான அடிப்படை உரிமை இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

உலகத்தில் முதலில் சுவீடன் நாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. அந் நாடு 1766 ஆம் ஆண்டில் பத்திரிகைச் சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றி ‘தகவலறியும் உரிமையானது மக்களின் அடிப்படை உரிமை’ என்பதனை பிரகடனப்படுத்தியது.

1966 ஆம் ஆண்டு அமெரிக்கா தகவலறியும் உரிமையை சட்டத்தினை அமுல்படுத்தியது. 1976 ஆம் ஆண்டில் மெக்ஸிகோ நாட்டில் தகவல் அறியும் உரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பின் இலங்கையை தவிர ஆசிய நாடுகளில் தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இலங்கையில் 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தினால் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான நடை முறை காணப்படவில்லை. குறிப்பாக யுத்தம் உக்கிரம் அடைந்த கால கட்டத்தில் “ஊடக தணிக்கை“ மிகவும் கடினப்படுத்தப்பட்டது.

இக்காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள்கடத்தப்படுதல், காணமாமல் செய்யப்படுதல், மிரட்டப்படுத்தல், படுகொலை செய்யப்படுதல் ஊடக நிறுவனங்கள் தாக்கப்படல் போன்ற அரசாங்கத்தின் வன்முறைகள் தலைவிரித்தாடின. இதனால் ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு தாமாக வெளியேறும் நிர்பந்தம் ஏற்பட்டது.

கண்ணீரும் செந்நீரும் கவலைகளும் நிரம்பிய காலங்களே இலங்கையின் ஊடக வராற்றில் அதிகம் ஆதலால் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்டன.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின் மெல்ல மெல்ல அரசியல் தலைமையில் மாற்ற ஏற்படுத்த வேண்டிய சூழல் வந்தது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி வழங்கினார். அதற்கு அமைவாக 2016 ஜூன் மாதம் 24ம்நாள் நாடாளுமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அடிப்படை உரிமை சட்டமாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் நாள் நாடாளுமன்றில் சபாநாயகர் ஒப்புதல் வழங்கி அது சட்டமாக அறிவிக்கப்பட்டது.

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ம் திகதி தகவல் அறியும் உரிமை சட்டம் இலங்கையில் நடை முறைப்படுத்தப்பட்டது.

அதே வேளை “ தேசிய பாதுகாப்பு சட்டம்” ஒன்றும் நடைமுறையில் இருப்பதால் பலரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயனை அடைய முடியாமல் உள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a comment