நாமல் குமாரவிடம் இன்று இரவு 8.30 வரை 10 மணி நேரம் விசாரணை

311 0

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பிரதானி நாமல் குமாரவிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னர் இன்று (17) இரவு 8.30 மணிக்கு குற்றவியல் திணைக்களத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

இன்று காலை 10.00 மணிக்கு அவர் குற்றவியல் திணைக்களத்துக்குள் பிரவேசித்து 10 மணித்தியாலம் அவரிடம் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நாமல் குமார வெளியிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான செவ்வை செய்யப்படாத வீடியோ காட்சிகளை குற்றவியல் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இன்று (17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவியல் திணைக்களம் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment